தூத்துக்குடிக்கு 12–ந் தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


தூத்துக்குடிக்கு 12–ந் தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Jun 2017 2:30 AM IST (Updated: 9 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடிக்கு வருகிற 12–ந் தேதி வருகை தரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானம்

கூட்டத்தில், வருகிற 12–ந் தேதி மறைந்த என்.பெரியசாமியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கு வருகைதரும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகபெருமாள், ஜோதிடேவிட், மாவட்ட பொருளார் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், திருச்சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story