மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல்: 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
வெம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெம்பாக்கம்,
இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல்
வெம்பாக்கத்தை அடுத்த உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). செய்யாறை அடுத்த சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ, சக்தி என்ற 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மகேந்திரன் உறவினர் திருமணத்துக்காக மோட்டார் சைக்கிளில் அய்யன்காரக்குளத்துக்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார்.
அதேபோல் செய்யாறை அடுத்த சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் முனீர்பாஷா (23), திருமணம் ஆகவில்லை. இவரும் செய்யாறை அடுத்த சிப்காட்டில் உள்ள அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். முனீர்பாஷாவும் நேற்று முன்தினம் இரவு மாங்கால் கூட்ரோடு அருகே ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
காஞ்சீபுரம் - வந்தவாசி சாலையில் நரசமங்கலம் கூட்ரோடு அருகே முனீர்பாஷா மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென முனீர்பாஷா மோட்டார் சைக்கிள் மீது மோதினார். தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மகேந்திரன் மோட்டார் சைக்கிள் மீதும் மோதினார். எனினும் அவர் நிற்காமல் சென்று விட்டார்.
2 பேர் சாவு
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முனீர்பாஷாவும், மகேந்திரனும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின்னர் மகேந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முனீர்பாஷா சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story