மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு


மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 3:00 AM IST (Updated: 9 Jun 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கம் கடையில் துணி வாங்குவது போல் நடித்து பெண் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்து 15 பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது.

ஆவடி, 

சென்னை விருகம்பாக்கம் அபுகாலி தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது50). இவர் அதே பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடைக்கு துணி வாங்க 2 பேர் வந்தனர். அப்போது அவர்கள் பத்மாவிடம் துணி குறித்து பேசினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் கடையில் இருந்து சென்று விட்டனர்.

 மர்மநபர்கள் சென்ற நிலையில் பத்மா கடைக்கு துணி எடுக்க மற்றொருவர் வந்தார். அப்போது பத்மா கடையில் மயங்கி கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அதற்குள் பத்மாவுக்கு மயக்கம் தெளிந்தது. அவர் போலீசாரிடம் கூறுகையில் ‘மர்ம நபர்கள் 2 பேர் துணி எடுப்பது போல் கடைக்கு வந்து என் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்து, நான் அணிந்திருந்த வளையல், கம்மல், சங்கிலி உள்பட 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிசென்றதாக’ கூறினார்.

 இதுகுறித்து அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story