ரூ.25 லட்சத்தில் ஏழை-எளிய மக்களுக்கு புத்தாடை தொழில் அதிபர் வழங்கினார்


ரூ.25 லட்சத்தில் ஏழை-எளிய மக்களுக்கு புத்தாடை தொழில் அதிபர் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:00 AM IST (Updated: 9 Jun 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரூ.25 லட்சத்தில் ஏழை-எளிய மக்களுக்கு புத்தாடை தொழில் அதிபர் வழங்கினார்

கும்பகோணம்,

கும்பகோணம் மேலக்காவேரியில் ஜாமியா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தொழில் அதிபருமான பிரசிடென்ட் அபுபக்கர் சார்பில் ரூ.25 லட்சம் செலவில் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு ரமலான் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜாமியா பள்ளிவாசல் தலைவர் இதயத்துல்லா, செயலாளர் ஒலி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அட்லஸ் மாடுலர் கிச்சன் நிர்வாக இயக்குனரும், தொழில் அதிபருமான சிராஜூதீன் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது வருமானத்தில் 2.5 சதவீதம் தொகையை உதவி செய்வதற்காக வழங்க இறைமறையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து இஸ்லாமியர்களும் வழங்கி வருகிறார்கள். இதே போல செட்டிமண்டபம், சுவாமிமலை, பாபுராஜபுரம், கருப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற மக்களுக்கும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Tags :
Next Story