நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று மூடப்படுகிறது
நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.
சென்னை,
நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மூடப்படுகிறது. இதனால் தென் சென்னை பகுதியில் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவசர குடிநீர் தேவைக்கு பொதுமக்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள செல்போன் எண்களை சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு
நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடி
நீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர்(ஒரு மில்லியன் 10 லட்சம் லிட்டர்) வீதம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெம்மேலியில் இருந்து எடுக்கப்படும் குடிதண்ணீர் தென்சென்னை பகுதிகளிலும், மீஞ்சூரில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் வடசென்னைக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளிலும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு நிலையங்கள் உள்ள பகுதிகளில் கடல் நீரின் நீரோட்டம் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், இங்குள்ள கருவிகள் அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. இதனால் இந்த நிலையங்கள் பராமரிப்பு பணிக்காக அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனால் இதனை நம்பி இருக் கும் பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
தென்சென்னை பகுதி பாதிப்பு
பெரும்பாலும் தென்சென்னை பகுதி மக்கள் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முழுமையாக நம்பி இருக்கின்றனர். ஆனால் கடந்த 1 மாதமாக இவர்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி காலி குடங்களுடன் செல்வதை காணமுடிகிறது.
குடிநீர் வழங்குவதில் தடங்கல்
இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நெம்மேலி கடல்நீர் சுத்தி
கரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர்(10 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் சில முக்கியமான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதைத்
தொடர்ந்து நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று(வெள்ளிக்கிழமை) மூடப்படுகிறது.
இதனால் தென் சென்னை பகுதியை சேர்ந்த திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லு£ர்,
ஈ.சி.ஆர், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவசர தேவைக்கு...
இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.
அவசர குடிநீர் தேவைக்கு துணை பகுதி பொறியாளர்களை தொடர்புகொண்டு பயனடையலாம்.
அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதியினர் 81449–30245, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதியினர் 81449–30267, ஈ.சி.ஆர், நீலாங்கரை, சோழிங்கநல்லு£ர் பகுதியினர் 81449–30252 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story