பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுதி வசதிகள் உள்ளன. அதன்படி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 15 விடுதிகளும், மாணவிகளுக்கு 7 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதிகளிலும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
உணவு, தங்கும் வசதி இலவசம்
அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். விடுதியில் சேரும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பங்கள் வருகிற 20-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, அல்லது விடுதி காப்பாளரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோருடைய ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story