உடுமலை அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; கல்லூரி மாணவர் சாவு
உடுமலை அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 5 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடுமலை,
உடுமலை மாணிக்கம் வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் ராகேஷ் (வயது 19). இவர் திப்பம்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் உடுமலை தளி ரோட்டை சேர்ந்த நவீன் (19), உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த விபுன் (20). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை உடுமலையில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் பெதப்பம்பட்டி செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
இதுபோல் உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (26). இவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த நவீன்குமார்(20), தனப்பிரகாஷ் (21) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் உடுமலைக்கு வந்து கொண்டிருந்தனர். உடுமலை-பெதப்பம்பட்டி ரோட்டில் குறிஞ்சேரியில் ஒரு கோவில் அருகே வந்த போது 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மாணவர் சாவு-5 பேர் படுகாயம்
இந்த விபத்தில் கல்லூரி மாணவர் ராகேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்களில் 2 பேர் உடுமலையில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 3 பேர் கோவைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இந்த விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் ராகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story