விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-09T02:28:59+05:30)

திருச்சியை அடுத்த வண்ணாங்கோவில் என்ற இடத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை செய்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சியை அடுத்த வண்ணாங்கோவில் என்ற இடத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை செய்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தினார்கள். மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் பிரபாகரன், அரசு ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். மாவட்ட செயலாளர் முத்தழகன் உள்பட நிர்வாகிகள் மாட்டிறைச்சியை சாப்பிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story