புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:45 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பாளையம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு மது அருந்துபவர்களால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி காசாங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் நேற்று மாலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து டாஸ்மாக் உழியர்கள் கடையை மூடினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, டாஸ்மாக் அதிகாரி தேன்மொழி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காசாங்கோட்டை- ஸ்ரீபுரந்தான் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story