கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு


கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள அரிசி மண்டி, சில்லறை விற்பனை அரிசி கடைகள் உள்ளிட்டவற்றில் நேற்று திடீரென மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சின்னமுத்து, ரத்தினவேல், அழகுவேல், ரவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுகிறதா? என அரிசியை மென்று பார்த்து சோதனையிட்டனர். அப்போது விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட அரிசியே விற்பனைக்கு இருந்ததால் அங்கிருந்து அதிகாரிகள் கிளம்பி சென்றனர். இதே போல் ஓட்டல்களில் இட்லி அவிப்பதற்கு துணியை பயன்படுத்துவதற்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் பெரம்பலூரில் உள்ள ஓட்டல்களுக்கு சென்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தப்படாதது தெரிய வந்தது. அரிசி கடைகள், ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பெரம்பலூரில் பர பரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story