பாகனேரி, கல்லல் பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்


பாகனேரி, கல்லல் பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

பாகனேரி மற்றும் கல்லல் பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

கல்லல்,

பாகனேரி அருகே உள்ள வெள்ளஞ்சம்பட்டி ஆதினமிளகி அய்யனார் கோவில் பால்குட விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. வெள்ளஞ்சம்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் 21 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பாண்டிகோவில் பாண்டியராஜன் வண்டியும், 2-வது பரிசை அலங்காநல்லூர் புதுப்பட்டி தயாஜ் அம்பலம் வண்டியும், 3-வது பரிசை வெள்ளஞ்சம்பட்டி கறிக்கடை பாலு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை விராமதி சந்திரன் வண்டியும், 2-வது பரிசை வெள்ளியங்குன்றம் பார்த்திபன் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது.

கல்லல் ஒன்றியம்

இதேபோல் கல்லல் ஒன்றியம் கூமாச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கூமாச்சிப்பட்டி-செம்பனூர் சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக நடைபெற்ற பந்தயத்தில் 35 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 2-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை வண்டியும், 3-வது பரிசை வாணியங்குடி பாபாசாமி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் பிரிவில் முதல் பரிசை ஆலம்பாடி காளி வண்டியும், 2-வது பரிசை சாமியார்பட்டி ரமேஷ் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி சம்பத் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை கல்லுப்பட்டி குமணன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் அப்துல்காதர் வண்டியும் பெற்றது.

பின்னர் பந்தயத்தில் வெற்றிபெற்ற அனைத்து மாட்டு வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story