பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு என்று 38 பள்ளி விடுதிகளும், 9 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும் மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விடுதிகளில் எவ்வித செலவீனமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன்படி அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களும், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் வழங்கப்படுகிறது.
விதிமுறைகள்
இந்த விடுதிகளில் சேர விரும்புபவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ அல்லது இணை இயக்குனர்(கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story