உண்டியல் திருட்டை தடுக்க போலீஸ்– வழிபாட்டுதலம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

குளச்சல்,
குளச்சல் போலீஸ் உப கோட்டத்துக்கு உட்பட்ட கோவில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்களில் உண்டியல் திருட்டை தடுக்கும் வகையில் போலீஸ்– வழிபாட்டு தலம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் குளச்சலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். இதில் வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பேசும்போது கூறியதாவது:– வழிபாட்டு தலங்களில் உண்டியல் திருட்டை தடுக்க ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் 5 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். உண்டியல் வசூலை தினமும் எடுத்து நிர்வாகிகளில் ஒருவர் தன் பொறுப்பில் லாக்கரில் வைத்துக்கொள்ள வேண்டும். வழிபாட்டு தலத்தை சுற்றி ‘நைட் விஷன் பவர்புல் கேமரா’ அமைக்க வேண்டும் அல்லது இரவு பாதுகாவலர் நியமிக்க வேண்டும். சந்தேகப்படக்கூடியவர்கள், அன்னிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story