‘காலா’ படப்பிடிப்பிற்கு மும்பை வந்திருந்த ரஜினிகாந்துடன் மராட்டிய முதல்–மந்திரியின் மனைவி அம்ருதா சந்திப்பு


‘காலா’ படப்பிடிப்பிற்கு மும்பை வந்திருந்த ரஜினிகாந்துடன் மராட்டிய முதல்–மந்திரியின் மனைவி அம்ருதா சந்திப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-09T03:21:40+05:30)

‘காலா’ படப்பிடிப்பிற்காக மும்பை வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார்.

மும்பை,

‘காலா’ படப்பிடிப்பிற்காக மும்பை வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார்.

ரஜினியுடன் சந்திப்பு

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக கடந்த 28–ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் மும்பை வந்தார். மும்பை வடலா, தாராவி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் கருப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேற்று முன்தினம் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார்.

சமூக பிரச்சினைகள் பற்றி...

ரஜினிகாந்த்துடன் தான் சந்தித்து பேசிய புகைப்படத்தை அம்ருதா பட்னாவிஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், சில சமூக பிரச்சினைகள் குறித்து தலைவருடன் (ரஜினிகாந்த்) பேச வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இருப்பினும் இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாடகி, மாடலிங்

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனியார் வங்கி அதிகாரி, பாடகி, மாடலிங் என பன்முக திறன் கொண்டவர்.

பெண் சிசு கொலை தொடர்பாக இவர் பாடிய விழிப்புணர்வு பாடல் பிரபலம் ஆனது. சமீபத்தில் திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்ட ‘பே‌ஷன் ஷோ’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். மற்றொரு பே‌ஷன் ஷோ நிகழ்ச்சியின் போது நடிகர் அமிதாப் பச்சனுடன் அம்ருதா நடனமாடி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story