சேலம் அருகே மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் தீ பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு
சேலம் அருகே மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் கூச்சலிட்டால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
மும்பையில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில் செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். நேற்று சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் மாலை 3 மணி அளவில் இந்த ரெயில் ஈரோடு நோக்கி புறப்பட்டது. சேலம் அருகே உள்ள வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும், மாவேலிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட ஓடமங்கலம் பகுதியில் வந்தபோது ரெயில் என்ஜினில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீப்பொறிகளும் பறந்தன.
மேலும் கரும்புகை அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியதால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதற்கிடையே புகையை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர்கள் ரெயிலை அங்கேயே நிறுத்தினார்கள். ரெயில் நின்றதும் என்ஜினின் அருகில் உள்ள பெட்டிகளில் இருந்த பயணிகள் தங்களது பொருட்களை எடுத்து கொண்டு வெளியில் ஓடினார்கள். அப்போதும் ரெயில் என்ஜினில் இருந்து ‘குபுகுபு’வென்று புகை வந்து கொண்டு இருந்தது.
பழுது நீக்கப்பட்டது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெயில் என்ஜின் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் என்ஜினை பரிசோதனை செய்தபோது ‘பிரேக் வால்வு’ பகுதியில் பழுது ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாக புகை ஏற்பட்டு தீப்பொறி பறந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பழுதை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பழுது நீக்கப்பட்டதும் 20 நிமிடம் தாமதத்துக்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. ஆனால் மிகக்குறைந்த வேகத்தில் தான் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
தண்ணீர் நிரப்பக்கோரி...
ஈரோடு ரெயில் நிலையம் வந்தடைந்ததும் அந்த ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கி பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பக்கோரி நடைமேடையில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரெயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு தங்களுடைய பெட்டிகளில் ஏறினர்.
இதுகுறித்து திருநெல்வேலியை சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் கூறியதாவது:-நாங்கள் மும்பையில் இருந்து இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறோம். பாதி வழியிலேயே ரெயிலில் தண்ணீர் தீர்ந்து விட்டது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். இதுபற்றி டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு
மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் கூறும்போது, ‘காலையில் இருந்தே தண்ணீர் நிரப்பக்கோரி டிக்கெட் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோதும் தண்ணீர் வேண்டும் என்று புகார் கூறினோம். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே வழியில் ரெயில் என்ஜினில் தீப்பற்றிக்கொண்ட சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அதிகாரிகள் தீ விபத்தை பார்வையிட்டு சரிசெய்தாலும் பெரும் அச்சத்துடனே ஈரோடு வரை பயணம் செய்தோம்’ என்றார்.
இதற்கிடையே மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்று என்ஜின் பாருத்தப்பட்டதுடன், ரெயில் பெட்டிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெ யில் 45 நிமிட நேரம் தாமதமாக மா லை 5.45 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. ரெயில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story