எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறவேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறவேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2017 11:06 PM GMT (Updated: 2017-06-09T04:35:57+05:30)

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறவேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் ஜீரோ அவரில் நடந்த விவாதம் வருமாறு:-

அன்பழகன்: மருத்துவ முதுநிலை படிப்பில் அரசின் இட ஒதுக்கீடான 50 சதவீத இடத்தில் சேர நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் இவர்களில் 20 பேர் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அவர்களிடம் கட்டணக்குழு அறிவித்த கட்டணத்தை பெறாமல் ரூ.38 லட்சம் முதல் ரூ.48 லட்சம் வரை கல்லூரிகள் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. சுயநிதி கல்லூரிகளில் 62 மாணவர்களில் 40 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்காலிக கட்டணமாக அவர்களிடம் ரூ.5.50 லட்சம் பெறப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.பி.எஸ். வகுப்புக்காக நீட் தேர்வினை நமது மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,050 இடங்களில் அரசு இடஒதுக்கீடாக 525 இடங்களை நாம் பெறவேண்டும். மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி இந்த ஆண்டு 50 சதவீத இடங்களைபெற உடனடியாக உத்தரவிட வேண்டும்.

 முதல்-அமைச்சர் நாராயணசாமி: இது சம்பந்தமாக நான் டெல்லி செல்லும்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து பேசுவேன். 50 சதவீத இடங்களை பெறுவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டு கடிதமும் எழுதியுள்ளேன். இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தகவல் வரும். அதன்பின் மத்திய அரசின் உத்தரவினை முழுமையாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story