மழைக்காலம் நெருங்கும் நிலையில் 168 சாலைகளில் சீரமைப்பு பணி முடியவில்லை


மழைக்காலம் நெருங்கும் நிலையில் 168 சாலைகளில் சீரமைப்பு பணி முடியவில்லை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:42 AM IST (Updated: 9 Jun 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலம் நெருங்கும் நிலையில், மும்பையில் இன்னும் 168 சாலைகளில் சீரமைப்பு பணி முடிக்கப்படவில்லை.

மும்பை,

மழைக்காலம் நெருங்கும் நிலையில், மும்பையில் இன்னும் 168 சாலைகளில் சீரமைப்பு பணி முடிக்கப்படவில்லை.

சாலை சீரமைப்பு பணி

மும்பையில் மழைக்காலத்தின் போது சாலையில் உள்ள குண்டு, குழிகள் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னாலேயே சாலைகள் சீரமைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மழைக்காலம் நெருங்கி விட்டது. பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. எனவே இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்கி தீவிரமடையும்.

இந்த மழைக்காலத்தையொட்டி மும்பையில் சேதமடைந்து உள்ள ஆயிரம் சாலைகளை மே 31–ந் தேதிக்குள் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. பின்னர் இது 900–ஆக குறைக்கப்பட்டு, இறுதியில் 775 சாலைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

168 சாலைகள்

இருப்பினும் சீரமைப்பு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட சாலைகளையும் கூட மாநகராட்சி இன்னும் சீரமைக்கவில்லை.

மே 31–ந் தேதி முடிந்து நேற்றுடன் 8 நாட்கள் கடந்து விட்ட நிலையில், மும்பையில் இன்னும் 168 சாலைகள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘‘நாங்கள் சாலை சீரமைப்பு பணிகளை 3 வகையாக பிரித்து செய்து வருகிறோம். சாலை சீரமைப்பு பணிக்கான ஜல்லிகள் தானே மாவட்ட பகுதிகளில் இருந்து தான் வழக்கமாக கொண்டு வரப்படும்.

தற்போது அங்கு பல குவாரிகள் மூடப்பட்டு விட்டன. இதனால் தான் சாலை சீரமைப்பு பணியில் மந்தநிலை ஏற்பட்டு உள்ளது’’ என்றார்.

Next Story