கடலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு: 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்


கடலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு: 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:44 AM IST (Updated: 9 Jun 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாளில் 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி கடந்த 25–ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. கடலூர் தாலுகாவில் கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். நிறைவு நாள் அன்று மஞ்சக்குப்பம் குறுவட்டம் செல்லங்குப்பம், கடலூர் முதுநகர் (நகராட்சி), திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், கோண்டூர், வெளிச்செம்மண்டலம், கரையேறவிட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நலத்திட்ட உதவிகள்

இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைபட்டா உள்பட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதுவரை மொத்தம் 1,525 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 258 மனுக்கள் ஏற்கப்பட்டன. 98 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிறைவு நாள் அன்று மட்டும் 355 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 62 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 65 பேருக்கு பட்டா மாற்றம், 2 பேருக்கு தையல் எந்திரங்கள் என 129 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார். மொத்தம் இதுவரை 258 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது வருகிற 15–ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

இதில் தாசில்தார் பாலமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவா மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story