திருச்செந்தூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் கலெக்டரிடம், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு

திருச்செந்தூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் கலெக்டரிடம், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:30 AM IST (Updated: 9 Jun 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் வெங்கடேசிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் வெங்கடேசிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் வெங்கடேசிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது;–

கூடுதல் கட்டிடம்

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 935 மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் அந்த பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய வகுப்பறை கட்ட வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் கடம்பா குளம், ஆத்தூரான் கால் வாய்க்கால், சேதுக்குவாய்த்தான் குளம், நல்லூர் மேலகுளம், நல்லூர் கீழகுளம், ஆறுமுகநேரி குளம் உள்ளிட்ட 13 குளங்களின் மதகுகள் சேதம் அடைந்து உள்ளன. அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

மதுபான கடைகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் டி.பி. ரோட்டில், செயல்பட்டு வரும் 2 அரசு மதுபான கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Next Story