ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர ஜூலை 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர ஜூலை 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதிகளும், 1 கல்லூரி மாணவர் விடுதியும், 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடி யினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் செயல்பட்டு வருகின்றன.
சிறப்பு வழிகாட்டி கையேடு
இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு, உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும், மாணவர்களின் பள்ளிக்கும் இடைவெளி 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
விண்ணப்ப படிவங்களை...
பள்ளி மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று, அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதிக்குள் பூர்த்தி செய்்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story