திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா
திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் தரையில் சுவாமிகளை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
திருவெறும்பூர்,
சமயக் குரவர் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருடந்தோறும் 12 நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இதில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் கடந்த 6-ந் தேதி நடந்தது.
நேற்று மற்றொரு முக்கிய திருவிழாவான தெப்ப திருவிழா நடைபெற்றது. ஆனால் தெப்பக்குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் தரையில் சுவாமிகள் வைக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் பூஜைகள் நடத்தி, வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் தேரோடும் வீதியில் சுவாமிகள் வலம் வந்தனர்.
அலட்சிய போக்கு
புராண வரலாறு பெற்ற இத்திருத்தலத்தின் நீரில் வர வேண்டிய தெப்பம் நிலதெப்பமாக நடந்தது குறித்து இந்த கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சோம.அரங்கராஜன் கூறுகையில், பிரம்மன் தீர்த்தம் என சிறப்புப் பெற்ற சன்னதி திருக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவது வருத்தத்தை தருகிறது.
இக்குளத்தின் 300 அடி நீளம் கொண்ட ஒரு பக்க சுவர் இடிந்து 3 வருடங்களுக்கு மேலாகியும் அதை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 15 வருடங்களுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடைபெறுவது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மலைமேல் எறும்பீஸ்வரர் அருள்பாலிக்கும் சன்னதியின் கட்டிடமும் மிகவும் சேதமடைந்தது குறித்து கோவில் நிர்வாகம் அனுப்பிய கடிதம் மீதும் இந்திய தொல்லியல் துறை எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. இனி வருங்காலங்களிலாவது இந்திய தொல்லியல் துறையும், திருச்சி மாநகராட்சியும் கோவில் நிர்வாகம் மூலம் தரப்பட்ட புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Tags :
Next Story