திருக்குவளையில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருக்குவளையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருக்குவளை தாசில்தார் அலுலகத்தில் திருக்குவளை வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட தென்மருதூர், ஆதமங்கலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அணக்குடி, வடக்குப்பனையூர், தெற்குப் பனையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, பிறப்பு, இறப்புச்சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 97 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். பின்னர், சமூகப்பாதுகாப்பு திட்டம் சார்பில் 3 பேருக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித்தொகை, 4 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி, 4 பயனாளிகளுக்கு இலவச பட்டா, 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 3 பயனாளிகளுக்கு பட்டா நகல்கள், 1 பயனாளிக்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தத்திற்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார். இதில் கலெக்டர் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் பரிமளம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், திருக்குவளை தாசில்தார் சுதாராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை
அதேபோல், நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காமராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அம்பல், பொறக்குடி, கிடாமங்கலம், ஏர்பாடி, திருப்புகலூர், கொங்கராயநல்லூர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 105 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி பரிசீலனை மேற்கொண்டு 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Related Tags :
Next Story