தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நடைபயணம் தொல்.திருமாவளவன் பங்கேற்பு
சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி, சேலத்தில் இருந்து சென்னைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நடைபயணம் தொடங்கினர். இதில் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
சேலம்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி சேலம் முதல் சென்னை வரை 360 கிலோ மீட்டர் நடைபயணம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. சேலம் செரிரோடு முள்ளுவாடிகேட் அருகே நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் கலியபெருமாள், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் பி.சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சாதி ஆணவப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட கோகுல்ராஜ், இளவரசன், சங்கர், நந்தினி, விமலா ஆகியோரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
கைகோர்க்கும்
தமிழகத்தில் தனி இடஒதுக்கீட்டுக்காக அருந்ததியினர் அமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குரல் கொடுத்து போராடினோம். எத்தனை போராட்டங்கள் நடத்தியபோதும் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்ட களத்தில் இறங்கிய வேளையில்தான் ஆட்சியாளர்களின் கவனம் திசை திரும்பியது. போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன் எடுக்கிறபோது அலட்சியப்படுத்த முடியவில்லை.
தீண்டாமை என்பது அனைத்து சாதியிலும் உள்ளது. இடதுசாரிகளை தவிர, எந்த அரசியல் கட்சிகளும் சாதிபிரச்சினையை கையில் எடுப்பதில்லை. ஏனென்றால், ஓட்டு பறிபோய்விடும் என்ற பயம் தான் காரணம். ஓட்டைப்பற்றி கவலைப்படாமல் நாட்டைப்பற்றி சிந்தித்தது. அந்த வகையில்தான் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அமைப்போடு இணைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் இடதுசாரிகளோடு விடுதலை சிறுத்தைகள் என்றென்றும் கைகோர்த்து இயங்கும்.
வெளிப்படையான வன்முறை
மோடி ஆட்சியில் மதவெறி, சாதிவெறி தான் அதிகமாக உள்ளது. ஊடகவியலாளர்களுடன் நடந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்க முயன்றனர். மாட்டு இறைச்சி விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. மாட்டுக்கறி தின்ற பலர் கொடூரமாக தாக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் வெளிப்படையாகவே வன்முறையில் ஈடுபடுகிறார்கள். மாட்டில் இருந்து கிடைக்கும் எந்த பொருளும் கழிவுகிடையாது. ஏதாவது ஒன்றுக்கு பயன்படுகிறது. நாட்டு நலனைவிட மாட்டு நலனே முக்கியம் என ஆட்சி நடத்தும் மோடி பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தங்கவேலு, மாதர் சங்க மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். சேலத்தில் தொடங்கிய நடைபயணம் வருகிற 23-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது.

Related Tags :
Next Story