சின்னத்துறையை சேர்ந்த மீனவர் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை


சின்னத்துறையை சேர்ந்த மீனவர் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை
x
தினத்தந்தி 10 Jun 2017 4:00 AM IST (Updated: 10 Jun 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆல்பிரட். மீனவரான இவர் படகு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நாகர்கோவில்,

 இவருடைய மகன் மார்சல் எ.சில்வா மத்திய தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 820-வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர் தனது பள்ளி பருவத்தை தூத்தூர் பயஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர், சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று எச்.சி.எல். நிறுவனத்தில் ஒரு வருடம் பணிபுரிந்தார். பிறகு முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நாகர்கோவில் கிரேட் மைண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்றார். தொடர்ந்து டெல்லி சென்று முதன்மை தேர்வுக்கு தயார் செய்து, நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். இவரது சாதனையை சின்னத்துறை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story