குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பானையை உடைக்கும் போராட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பானையை உடைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:00 AM IST (Updated: 10 Jun 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பானையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனைவாரி கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டை போக்கி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்

இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஷேக்சலாவுதீன், ஒன்றிய தலைவர் வீரன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு ஆனைவாரி கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைகளை அனைவருக்கும் வழங்கக்கோரியும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பானைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story