அடுத்த ஜனாதிபதியாக இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’ வேண்டும் சிவசேனா சொல்கிறது


அடுத்த ஜனாதிபதியாக இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’ வேண்டும் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2017 3:52 AM IST (Updated: 10 Jun 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’ வேண்டும் என சிவசேனா சொல்கிறது.

மும்பை,

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’ வேண்டும் என சிவசேனா சொல்கிறது.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17–ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் பதவியை கைப்பற்றும் நோக்கத்தில், கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவை பெற பாரதீய ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. அளித்த பெட்டியில், ‘‘ ஜனாதிபதி தேர்தலில் சிவசேனா சுதந்திரமான நிலைபாட்டை எடுக்கும். இந்து தேசம் என்ற கனவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தான் அந்த பதவிக்கு தகுதியானவர் என தெரிவித்திருந்தார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா பல ஆண்டுகளாக அங்கம் வகித்த போதிலும் 2012 மற்றும் 2007–ம் ஆண்டுகளில் நடந்த ஜனதாதிபதி தேர்தலின் போது பா.ஜனதாவின் நிலைபட்டை சிவசேனா புறக்கணித்தது.

இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’

இந்த நிலையில் நேற்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சிவசேனாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:–

இதுவரை பல மதசார்பற்ற ‘ரப்பர் முத்திரை’கள்(ஜனாதிபதிகள்) ராஷ்டிரபதி பவனை அலங்கரித்தன. ஆனால் தற்போது அயோதி ராமர் கோவில் பிரச்சினையில் தீர்வு காணவும், பொது சிவில் சட்டம் மற்றும் ஆர்டிகல் 370 அரசியலமைப்பு சட்டம் போன்றவற்றை நிறைவேற்றவும் இந்துத்துவா ‘ரப்பர் முத்திரை’யை நாம் ஜனாதிபதி இருக்கையில் அமர்த்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது சிவசேனா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளதை எடுத்து கட்டியுள்ளது.


Next Story