ரூ. 400 கோடி முறைகேடு வழக்கு அமலாக்க பிரிவினர் முன்னிலையில் பாபா சித்திக் ஆஜரானார்


ரூ. 400 கோடி முறைகேடு வழக்கு அமலாக்க பிரிவினர் முன்னிலையில் பாபா சித்திக் ஆஜரானார்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:02 AM IST (Updated: 10 Jun 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

ரூ.400 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் இன்று அமலாக்க துறையினர் முன் இன்று நேரில் ஆஜரானார். காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் பாபா சித்திக். இவர் கடந்த 2000– 2004–ம் ஆண்டுகளில் மகாடா வாரியத்தின் தலைவராக

மும்பை,

ரூ.400 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் இன்று அமலாக்க துறையினர் முன் இன்று நேரில் ஆஜரானார்.

காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் பாபா சித்திக். இவர் கடந்த 2000– 2004–ம் ஆண்டுகளில் மகாடா வாரியத்தின் தலைவராக பதவி வகித்தார். அப்போது மகாடா சார்பில் பாந்திராவில் உள்ள குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டன.

பாபா சித்திக் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் ஒதுக்கீடு செய்ததாகவும், இதில் ரூ. 400 கோடி வரை முறைகேடு நடந்ததாகவும் கூறி பாந்திரா போலீசில் கடந்த 2012–ஆம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் பணமோசடி தடுப்பு பிரிவின் கீழ் பாபா சித்திக். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை மேற்கொண்ட கட்டுமான அதிபர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திடீர் சோதனை

இந்தநிலையில் இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்க பிரிவினர் கடந்த 31–ந் தேதி பாபா சித்திக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அத்துடன் இந்த முறைகேட்டில் சில முக்கிய பிரமுகர்களின் பினாமி நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பாக மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டும் பொருட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்க பிரிவினர் நிருபர்களிடம் கூறினர்.

அமலாக்க பிரிவினர் முன் ஆஜர்

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பதில் அளிக்க பாபா சித்திக்கை நேரில் ஆஜராகுமாறு அமலாக்க பிரிவினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதையேற்று நேற்று பாபா சித்திக் அமலாக்க பிரிவினர் முன் நேரில் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பாபா சத்திக்கிற்கு இந்த திரையுலகினருடன் நெருங்கிய நட்பு உண்டு. இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட இப்தார் விருந்தில் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான்கானும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story