பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:22 AM IST (Updated: 10 Jun 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அலுவலக உதவியாளர்களுக்கு உடனடியாக பதிவுறு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2017–ம் ஆண்டிற்குரிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஓராண்டு பணி முடித்த பின் வட்டாட்சியர், துணை வட்ட

சிவகங்கை,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அலுவலக உதவியாளர்களுக்கு உடனடியாக பதிவுறு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2017–ம் ஆண்டிற்குரிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஓராண்டு பணி முடித்த பின் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பணியிடங்களில் பணிபுரிபவர்களை மாறுதல் செய்து தகுதியான நபர்களுக்கு முதுநிலைப்படி வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். ஊழியர்கள் மதியம் சாப்பிடுவதற்காக இட வசதி செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை தொடங்கினர். நேற்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இது போல் வருகிற 15–ந் தேதி தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 22–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசன் தெரிவித்தார்.


Next Story