சம்பளம் வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அரை நிர்வாண போராட்டம்


சம்பளம் வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அரை நிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:25 AM IST (Updated: 10 Jun 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வேதாளை, சுந்தரமுடையான், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளுக்கு அடையாள அட்டைகள் பெற்று பணியாற்றி வந்தனர்.

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வேதாளை, சுந்தரமுடையான், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளுக்கு அடையாள அட்டைகள் பெற்று பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் யூனியன் அலுவலத்தில் தொடர்ந்து மனுகொடுத்து கோரிக்கை விடுத்தனர். மேலும் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து சம்பளம் வழங்காததை கண்டித்து மண்டபம் யூனியன் அலுவலத்தில் போராட்டம் நடத்தப்போவதாக உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள், கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story