கோடிகளில் கொழிக்கும் 12 வயது தொழிலதிபர்!
அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, இயற்கைத் தேன் கலந்த எலுமிச்சம் பழச்சாறு விற்பனையின் மூலம் வெற்றிகரமான தொழிலதிபராக உருவாகியிருக் கிறார்.

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மிகைலா உல்மர் என்ற அந்தச் சிறுமி, தற்போது ‘மீ அண்ட் தி பீஸ் லெமனேட்’ என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
பள்ளி செல்லும் வயதில் மிகைலா தொழிலதிபராகக் காரணமே தேனீக்கள்தான். ஆம், தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன், சுவையான புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ‘பீ ஸ்வீட் லெமனேட்’ என்னும் பெயர் கொண்ட இயற்கைப் பானத்தைத் தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ஹோல் புட்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் மிகைலா நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது. அதற்காக, மிகைலாவுடன் ரூ. 70 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.
மேலும், ‘ஷார்க் டாங்க்’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் இச்சிறுமிக்கு ரூ. 38.59 லட்சம் முதலீடு கிடைத்துள்ளது.
இந்த வகை பானங்களை கடந்த 1940-ல் மிகைலாவின் பாட்டி முதலில் தயாரித்தார். அதற்கான ரகசியம், வாழையடி வாழையாகத் தற்போது மிகைலா வரை வந்து சேர்ந்துள்ளது.
சிறுமி மிகைலாவுக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது.
நான்கு வயதில் அவரை தேனீ கடித்துள்ளது. அப்போது வலியால் துடித்த மிகைலா, பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் தேனீக்களை குறித்துப் படிக்கத் தொடங்கியுள்ளார்.
அதன் பின்னர் பீ ஸ்வீட் லெமனேட் பானம் தயாரிக்கும் தொழிலை கடந்த 2009-ல் தொடங்கினார்.
தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டு வரும் மிகைலா, தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார்.
தேனீ இனங்கள் அதிகம் இறப்பதாகக் கூறும் மிகைலா, தேனீ வளர்ப்பவர்களும் இதனால் பாதிப்படைவதாகச் சொல்கிறார்.
2016-ம் ஆண்டின் சிறந்த சில்லறை வர்த்தகர் விருதை வென்றுள்ள மிகைலா, மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் சேர்ந்து, அவருக்கு நிகராக பல தொழில் மாநாடுகளில் சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பாராட்டையும் பெற்றுள்ள மிகைலா, அவருக்குத் தன்னுடைய நிறுவனத்தின் பானத்தை தன் கையால் அருந்தக் கொடுத்துள்ளார்.

Related Tags :
Next Story