அரியலூர் மாவட்டங்களில் நடந்த 3-ம் நிலை செயல் அலுவலர்களுக்கான தேர்வை 560 பேர் எழுதினர்


அரியலூர் மாவட்டங்களில் நடந்த 3-ம் நிலை செயல் அலுவலர்களுக்கான தேர்வை 560 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த 3-ம் நிலை செயல் அலுவலர்களுக்கான தேர்வை 560 பேர் எழுதினர்.

அரியலூர்,

தமிழ்நாடு தேர்வாணையத்தால் குரூப்-7 பி-யில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான தேர்வுகள் நேற்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் செயல் அலுவலருக்கான தேர்வெழுத 645 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 311 நபர்கள் தேர்வெழுதினர். மேலும் 334 நபர்கள் தேர் வெழுதவில்லை.

பஸ் வசதி

மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப் 8-ல் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கான தேர்வுகளை பெரம்பலூர் மாவட்டத்தில் 880 நபர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் எளிதில் சென்று வர தேவையான பஸ் வசதிகளும், தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் நபர்களின் வசதிக்காக ஒரு மருத்துவக்குழுவும், தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்வு மையம் முழுவதும் வீடியோ கிராபர் மூலமாக தேர்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்வு மையங்களை கண்காணிப்பதற்காக பறக்கும் படை அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்திலும்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. நேற்று நடத்திய செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான தேர்வு அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. தேர்வையொட்டி 516 பேருக்கு தேர்வெழுத தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற செயல் அலுவலருக்கான தேர்வில் 249 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 267 பேர் தேர் வெழுத வரவில்லை. தேர்வினை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்ட வட்டாட்சியர் குமரய்யா உடனிருந்தார். தேர்வுகள், காலை-மாலை என இருவேளையும் நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


Related Tags :
Next Story