அரசு கிளை அச்சகத்தின் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு


அரசு கிளை அச்சகத்தின் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அரசு கிளை அச்சகத்தின் பணிகளை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் அரசு கிளை அச்சகத்தின் பணிகளை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.

இந்த ஆய்வின்போது அரசுத்துறை படிவங்கள் அச்சிடப்படும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். தொடர்ந்து புத்தகம் கட்டும் பிரிவில் அச்சிட்ட படிவங்கள் கட்டும் பணியினையும் (பைண்டிங்) பார்வையிட்டார். தொடர்ந்து அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் குறித்தும் அச்சகத்தின் மேலாளரிடம் கேட்டறிந்தார்.

மேம்படுத்தும் வகையில்...

தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் செய்தித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு கிளை அச்சகம் இயங்கி வருகிறது. இந்த அச்சகமானது 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகும். இந்த அச்சகத்தினை மேம்படுத்தும் வகையில் நவீன அச்சு எந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அச்சகத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின்போது அரசு கிளை அச்சகத்தின் மேலாளர் சத்தியமூர்த்தி உள்பட பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story