உலகின் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான் மத்திய மந்திரி சதானந்த கவுடா பேச்சு


உலகின் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான் மத்திய மந்திரி சதானந்த கவுடா பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2017 2:00 AM IST (Updated: 11 Jun 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

உலகின் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா பேசினார்.

பெங்களூரு,

உலகின் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா பேசினார்.

மத்திய மந்திரி சதானந்த கவுடா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ‘பசுமை ஹெப்பால்‘ எனும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய திட்ட செயலாக்கம் மற்றும் புள்ளியல் துறை மந்திரி சதானந்த கவுடா கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:–

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக...

நம் நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் தான் சுதந்திரம் கிடைத்தது. தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நாம் ஒன்றிணைந்து அத்தகைய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

உலக பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்பட பெரிய பனி மலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் குடிக்கும் குடிநீர் சுத்தமாக இல்லை. சுவாசிக்கும் காற்றும் மாசுப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தொற்று நோய்கள் வேகமாக பரவும் நிலை உள்ளது.

மிகப்பெரிய பிரச்சினை

இந்த உலகின் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான். உலகின் வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்க துரிதமான நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் அதற்கான பயன்கள் கிடைக்கவில்லை. மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும். வெறும் பாடப்புத்தகத்தில் மட்டும் அதை பற்றி படித்தால் போதாது.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வீடுகளை எந்த அளவுக்கு நேசிக்கிறார்களோ, அதேபோல் சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும். அப்போது தான் மாசுபாட்டில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். நமது வீடுகளை எப்படி பாதுகாத்து தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைப்போல் சுற்றுசூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனோபாவம் அனைவரிடமும் வர வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், சாலமர திம்மக்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story