கிருஷ்ணகிரி அருகே போலி டாக்டர் கைது


கிருஷ்ணகிரி அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மருந்து கடை நடத்தி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 41). இவர் பி.பார்ம். முடித்து விட்டு அந்த பகுதியில் கடந்த 2 வருடமாக மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் ஒரு பகுதியில், அரசு டாக்டரை வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். அதன் பின்னர் அந்த மருத்துவர் வரவில்லை.

இதையடுத்து ரவிக்குமாரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமாருக்கு புகார் வந்தது.

கைது

இதையடுத்து நேற்று அவரது தலைமையில் மருத்துவ அலுவலர்கள், ரவிக்குமாருக்கு சொந்தமான மருந்து கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் மருந்து கடைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து டாக்டர் அசோக்குமார் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரது கடையில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்திய ஊசி, மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து கடைக்கு ‘சீல்‘ வைத்தனர்.


Related Tags :
Next Story