அரூர் அருகே தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து சேதம்
அரூர் அருகே அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து சேதம் அடைந்தன.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற சின்னம்மாள் கோவில் உள்ளது. இங்கு விழாக்காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலின் அருகே கூரைகள் வேய்ந்து அதில் சாமிபடங்கள் விற்பனை செய்யும் கடை, தேங்காய்-பழங்கள் கடை, அழகுசாதன பொருட்கள் கடை என வரிசையாக பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கடைகளை நேற்று முன்தினம் இரவு உரிமையாளர்கள் மூடிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள அழகுசாதன பொருட்கள் கடையில் திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் பரவத்தொடங்கியது.
7 கடைகள் சேதம்
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி அரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் ராட்சத குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து சேதம் அடைந்தன. அதில் இருந்த பொருட்கள் கருகி நாசம் ஆனது.
தீயில் கருகிய பொருட்களை பார்த்து கடைகளின் உரிமையாளர்கள் கண் கலங்கினார்கள். இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story