விவசாயி வீட்டில் பணம், ஆவணங்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
குலசேகரம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து பணம், ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறையை சேர்ந்தவர் மரிய நேசம் (வயது 71). இவரது மகன் ஏசுபாலன் (47), விவசாயி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலுக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் சில ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
வலைவீச்சு
யாரோ மர்ம ஆசாமிகள் மரிய நேசமும், ஏசுபாலனும் வெளியே செல்வதை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், வெட்டுக்கத்தியால் பீரோவை உடைத்து அதில் இருந்த பணம், ஆவணங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story