ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்சந்தையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அழகியமண்டபம்,
மத்திய பிரதேசத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகள் குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் திங்கள்சந்தையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் கிளாட்சன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் அசோகன் சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story