‘நீட்’ தேர்வு வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை
‘நீட்‘ தேர்வு வழக்கில் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நாகர்கோவிலில் மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கு 350 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதில் 10 இடங்கள் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை மையங்கள்
தமிழகத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் உயர்தர சிகிச்சையுடன் கூடிய விபத்து உயிர் காக்கும் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல் கட்டமாக செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை மருத்துவக்கல்லூரிகளில் இந்த மையங்களை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவக்கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலில் 100 இடங்களுடன் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். ஆனால் தற்போது புதுக்கோட்டையில் 150 இடங்களுடன் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், விருதுநகர், கரூர் மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவது என்பதை அரசுதான் முடிவு செய்யும்.
மாணவர் சேர்க்கை எப்போது?
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டுள்ளனர். அதற்கான நிதியை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போதைய சூழ்நிலையில் குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
‘நீட்‘ தேர்வை பொறுத்த வரை கொள்கை அளவில் தமிழக அரசு எதிர்க்கிறது. ‘நீட்‘ தேர்வு முடிவுகளை வெளியிட கோர்ட்டு தடை விதித்துள்ளது. கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகுதான் வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.
கல்லூரி ஆண்டு விழாவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்லூரி துணை முதல்வர் லியோடேவிட், அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி மேரிவிஜயா, உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story