வறண்டு கிடக்கும் கல்லணை 6-வது ஆண்டாக தொடரும் விவசாயிகளின் சோகம்
கல்லணை வறண்டு கிடப்பதால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. விவசாயிகளின் சோகம் 6-வது ஆண்டாக தொடர்கிறது.
திருக்காட்டுப்பள்ளி,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பாசன பகுதியின் விவசாய தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும். தற்போது தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி விட்டது. மழை அளவு குறைவாகவே உள்ளது. ஆகவே இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவது என்பதும், நாளை (ஜூன் 12) அணை திறக்கப்படுவதும் சந்தேகமே. ஜூன் 12-ந் தேதியோ, அதற்கு முன்பாகவோ மேட்டூர் அணையை திறந்து 6 ஆண்டுகள் ஆகி விட்டன.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை பெறும் கல்லணை தற்போது வறண்டு, பாலைவனம் போல காட்சி அளிக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய இயலுமா? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஒழுங்காற்று குழு
கடந்த 2011-ம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு பதிலாக 6-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் மாதம் அணை திறக்கப்படவில்லை. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜூன் 12-ல் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. குறுவை பயிருக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி போவதும், மழை வெள்ளத்தில் பயிர்கள் அழுகி போவதும் காவிரி டெல்டாவில் வாடிக்கையாகி விட்டது. காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மோட்டார் பாசனம்
ஆற்று தண்ணீர் கிடைக்காத நிலையில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மோட்டார் பாசனத்தை பயன்படுத்தி குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக வயலை உழும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நாற்று நட வசதியாக வயலில் தண்ணீர் நிரப்பி உள்ளனர்.

Related Tags :
Next Story