அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் தம்பிதுரை பேட்டி


அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம், தரகம்பட்டி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம் மற்றும் தாந்தோன்றி ஆகிய இடங்களில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதில் கோரிக்கை மனுக்களை பெற்ற தம்பிதுரை, அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முகாமில் சமூக நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மூவானூர் ராமாமிர்த அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவியை வழங்கினார். முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், கலெக்டருமான (பொறுப்பு) சூர்யபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

வீட்டு மனை பட்டா

முகாமில் தம்பிதுரை பேசுகையில், “கரூர் நகர்ப்புற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்ததையொட்டி 634 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிகள் அதிகளவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

முகாமில் கீதா எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியம், சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் விஜயசங்கர், சுப்ரமணி, பாஸ்கர், தாசில்தார்கள் சக்திவேல் (கரூர்), முருகன் (கடவூர்), பாலசந்தர் (கிருஷ்ணராயபுரம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ கல்லூரி பணி

முன்னதாக தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், “மலேசியாவுக்குள் வைகோ நுழைய அனுமதி மறுத்ததை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை.

அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. கரூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப் படும். அ.தி.மு.க.வில் ஒன்றாக இணைந்து தான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகின்றோம். எதிரிகளுக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்” என்றார்.


Related Tags :
Next Story