காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனத்திற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனத்திற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்’ என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
கரூர்,
தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு புதியவர்களை நியமித்து கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதில் கரூர் மாவட்ட தலைவராக இருந்த பேங்க் சுப்பிரமணியன் மாற்றப்பட்டு சின்னச்சாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை பஸ் நிலையம் அருகே உள்ள வர்த்தக கமிட்டி பிரிவு தலைவர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கண்டன தீர்மானம்
கூட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் சின்னய்யன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் நகரம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் புதிய தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மேலும் அவருக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தலைவர் சின்னச்சாமி, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு துளியும் அறிமுகம் இல்லாதவர். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ஒருவரை நியமனம் செய்ததற்கு இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒத்துழைப்பு
புதிய மாவட்ட தலைவர் சின்னச்சாமிக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம். புதிய தலைவரை மாற்றி பெரும்பான்மையான மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதல் பெற்று ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்டன.
புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story