கண்மாயில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய வாலிபர்

கண்மாயில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய வாலிபர்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

கண்மாயில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய வாலிபர்

மேலூர்,

மேலூர் அருகில் உள்ள கைலாசபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சேவுகமூர்த்தி (வயது 17). திருப்பூரில் வேலை பார்த்து வரும் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று இப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சின்னபருவன்குளத்தில் சிலர் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். மரத்தை வெட்டினால் மழை பெய்யாது என கூறி சேவுகமூர்த்தி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரை கண்டு கொள்ளாமல் மரத்தை வெட்டும் பணியை தொடர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேவுகமூர்த்தி அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி மரத்தை வெட்டுவதை நிறுத்தாவிட்டால் குதித்து விடுவேன் என கூறி போராட்டம் நடத்த தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை சமாதானப்படுத்தி, மரம் வெட்டுவதை நிறுத்த உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து செல்போன் கோபுரத்தை விட்டு கீழே இறங்கிய சேவுகமூர்த்தியை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.

Next Story