நாராயணசாமி பணிவிதிகளை மீறி செயல்படுகிறார் கவர்னர் கிரண்பெடி புகார்


நாராயணசாமி பணிவிதிகளை மீறி செயல்படுகிறார் கவர்னர் கிரண்பெடி புகார்
x
தினத்தந்தி 11 Jun 2017 5:17 AM IST (Updated: 11 Jun 2017 5:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பணிவிதிகளை மீறி செயல்படுகிறார் என கவர்னர் கிரண்பெடி புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் பணிவிதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசின் பணி விதிகள் 21 (5) பிரிவு கூறுவது என்னவென்றால் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி, எந்த துறையிலும் எந்த பிரச்சினை தொடர்பான கோப்புகளையும் கேட்டுப் பெறலாம். இதுதொடர்பான ஆளுநரின் வழிகாட்டுதலை தொடர்புடைய துறை செயலர் கடைபிடிக்க வேண்டும். இதில் தான் எடுத்த நடவடிக்கையை துறை அமைச்சருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த பணி விதியை மீறி முதல்-அமைச்சர் தேவையின்றி நிர்வாகத்தின் செயல்திறன் வேகத்தை தடுத்து வருகிறார். கவர்னரின் பணிகளையும் தடுக்கிறார்.

முடக்கி விட்டார்

யூனியன் பிரதேச நிர்வாகியான கவர்னர் தான் நிதி, பணியாளர் துறை, ஒப்பந்தங்கள், மாநில பாதுகாப்பு, குழுக்கள் நியமனம் போன்றவற்றில் ஒப்புதல் தர வேண்டும். அதிகாரிகளை அழைப்பதும், கோப்புகளை கேட்பதும் இந்த நோக்கத்துக்காக தான். அதுவும் பணிவிதிகளிலேயே வருவதாகும். கோப்புகள், பிரச்சினைகளை முறையாக ஆய்வு செய்யாவிட்டால் எவ்வாறு செயல்படுத்த முடியும்.

இதுபோன்ற சட்டவிரோத, முறையற்ற செயல்பாடுகளால் தனக்குத்தானே முதல்- அமைச்சர் ஒரு தேக்க நிலையை உருவாக்கி, துறைகளின் இயக்கத்தையும் முடக்கி விட்டார். அமைதி, புரிந்துணர்வை உருவாக்குவதற்கு பதில் பிரிவினை, அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அரசு அதிகாரிகள், கவர்னரை சந்திப்பதையும் தடுத்து வருகிறார்.

இவ்வாறு அதில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

Next Story