மூளைக்குள் ஒரு மின்னல்
ஏதாவது ஒரு ஆண்டின் மாதத்தையும், தேதியையும் கூறி, ‘அன்று என்ன கிழமை?’ என்று கேட்டால் சிறிதும் தாமதிக்காமல் சட்டென்று சரியான கிழமையைக் கூறி, வியக்க வைக்கிறான், ஸ்ரீராம் பாலாஜி.
ஏதாவது ஒரு ஆண்டின் மாதத்தையும், தேதியையும் கூறி, ‘அன்று என்ன கிழமை?’ என்று கேட்டால் சிறிதும் தாமதிக்காமல் சட்டென்று சரியான கிழமையைக் கூறி, வியக்க வைக்கிறான், ஸ்ரீராம் பாலாஜி. கேள்வி கேட்பவர்களே சளைத்து போகும் அளவுக்கு ஆண்டு, மாதம், நாள், கிழமைகள் அத்தனையையும் அடுக்கடுக்காக மனத்திரையில் ஓடவிட்டு பதில் மழை பொழிந்து கொண்டிருக்கிறான். 4000 ஆண்டுகள் வரை காலண்டரில் இருக்கும் எண்களும், மாத, கிழமைகளின் எழுத்துக்களும் தனது மனதில் பதிந்து போய் உள்ளது என்று ஆச்சரியப்பட வைக்கிறான். காலண்டரை துல்லியமாக கணிக்கும் அவனுடைய நினைவாற்றல் திறனை பரிசோதித்து பார்க்கும் அனைவரும் அதிசயித்து போகிறார்கள். மலைக்க வைக்கும் அளவுக்கு மனத்திரையில் காலண்டரை பதிவேற்றம் செய்திருக்கும் அவனுடைய நினைவாற்றல் திறனுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் அவனுடைய சாதனை பதிவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்கு முழு மூச்சாக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறான்.
ஸ்ரீராம் பாலாஜி சென்னை வேளச்சேரியை சேர்ந்தவன். இவனுடைய தந்தை வேலுச்சாமி டைல்ஸ் வியாபாரம் செய்து வருபவர். தாயார் சிவபிரியா குடும்ப தலைவி. கிண்டி ஐ.ஐ.டியில் உள்ள கேந்திர வித்யாலயாவில் ஸ்ரீராம் பாலாஜி 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடைய சகோதரி விஷ்ணுபிரியா பிளஸ்-2 முடித்திருக்கிறார். அவர்தான் தம்பியிடம் புதைந்திருந்த காலண்டர் நினைவாற்றல் திறனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
“நான் தம்பியுடன் விளையாடும்போது அவன் காலண்டரில் உள்ள தேதி, கிழமைகளையும், நண்பர் களின் பிறந்தநாள் தேதிகளையும் சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுடன் படிக்கும் நண்பர்களுக்கு எந்த மாதத்தில் எந்த தேதியில் பிறந்த நாள் வருகிறது, அந்த மாதத்தில் எந்த தலைவர்கள் எல்லாம் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்து சொல்வான். அதனை நான் முதலில் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். அவனோ எப்போதும் காலண்டரை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான். அவனிடம் என் தோழிகளின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு அது எந்த கிழமையில் வருகிறது என்று கேட்டேன். அவனோ சற்றும் யோசிக்காமல் கிழமையை சொன்னான். அவன் விளையாட்டுக்கு ஏதோ ஒரு கிழமையை சொல்லி சமாளிக்கிறான் என்றுதான் நினைத்தேன். அவனோ, ‘எனக்கு தெரியும். நான் சொல்வது சரிதான்’ என்றான். நான் நம்ப மறுத்து காலண்டரை எடுத்து புரட்டி பார்த்தேன். அவன் சொன்ன கிழமை சரியாக இருந்தது. அதை பார்த்ததும் என்னால் நம்ப முடியவில்லை. மற்ற தோழிகளின் பிறந்தநாள் தேதிகளை கேட்டு அவனை பரிசோதித்தேன். அவனோ எதை கேட்டாலும் சட்டென்று பதில் சொல்லி என்னை திக்குமுக்காட செய்துவிட்டான்” என்கிறார்.
சகோதரனிடம் இருக்கும் காலண்டர் நினைவாற்றல் திறனை விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதனை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி தாயார் சிவபிரியா சொல்கிறார்:
“ஸ்ரீராம் பாலாஜியிடம் இருக்கும் நினைவாற்றல் திறனை மகள் என்னிடம் சொன்னபோது அதை நான் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவன் 6 மாத குழந்தையாக இருந்த போதே விரல்களை நீட்டியும், மடக்கியும் விளையாடிக்கொண்டிருப்பான். அதை பார்த்த என் தாயார், ‘குழந்தை இப்படி விரல்களை அசைத்து கொண்டிருப்பது குடும்பத்துக்கு நல்லதல்ல’ என்று கூறினார். ஒரு வயதானபோது மாத காலண்டரை பார்த்தால் சிரிப்பான். அதன் அருகில் கொண்டு சென்றால் குஷியாகிவிடுவான். அதில் இருக்கும் எண்களும், நிறங்களும் அவனை கவர்ந்திருப்பதாக நினைத்தேன்.
அவன் ஐந்தாம் வகுப்பு படித்தபோதுதான் முக்கியமான தேதியையும், கிழமையையும் நினைவில் வைத்திருப்பதை மகள் மூலம் அறிந்தேன். அவனிடம் கேட்டபோது நண்பர்கள், சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் பிறந்த நாளை நினைவில் வைத்து கூறினான். அப்போதும் எல்லோரும் நினைவில் வைப்பதுதானே என்று சாதாரணமாக எடுத்து கொண்டுவிட்டேன்.
செல்போனை கையில் எடுத்தால் காலண்டரையே கிளிக் செய்து பார்த்து கொண்டிருப்பான். எனது கணவர் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். சில வருடங்கள் கழித்து அவருடைய இறந்த தேதி யாருக்கும் நினைவில்லை. என் மகனிடம் கேட்டபோது அவர் இறந்த தேதியையும், கிழமையையும் சட்டென்று சொன்னான். அது சரிதானா என்று உறவினர்களிடம் விசாரித்தோம். அப்போதுதான் மகன் சொன்னது சரி என்பது தெரியவந்தது. உடனே சில வருடங்களின் தேதியையும், மாதத்தையும் மாறி, மாறி கேட்டோம். அவன் எல்லாவற்றுக்கும் சரியாக பதில் சொன்னான். எங்களால் நம்பவே முடியவில்லை. பின்னர் அவனுடைய பள்ளி ஆசிரியர்களிடம் இந்த விஷயத்தை கூறினோம். அவர்கள் பல ஆண்டு காலண்டரை இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்து அவனை பரிசோதித்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டான்” என்று பெருமிதம் கொள்கிறார்.
ஸ்ரீராம் பாலாஜிக்கு ஆரம்பத்தில் பள்ளியில் நண்பர்கள் வட்டம் குறைவாகவே இருந்திருக்கிறது. காலண்டரை வைத்து புதிர் கணக்கு போட்டு நட்பு வட்டத்தை பெருக்கிவிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாள் என்ன கிழமை வருகிறது என்று கேட்டு, அவனுடைய திறமையை மெருகேற்றி, தூண்டியிருக்கிறார்கள்.
“பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் என்னை பார்க்கும்போதெல்லாம் காலண்டரை மையப்படுத்தியே கேள்வி களால் துளைத்தெடுப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே ஒவ்வொரு ஆண்டு காலண்டரையும் அலசி ஆராய தொடங்கினேன். 2011-ம் ஆண்டில் எனக்கு 38 வருட காலண்டர்கள்தான் தெரியும். பள்ளி ஆசிரியர்களும், நண்பர் களும், பெற்றோரும் கொடுத்த ஊக்கத்தால் 6 மாதங்களில் 200 வருட காலண்டர்களை நினைவில் பதிய வைத்து கொண்டேன். காலண்டர் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால் எனக்கு அதனை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக தெரியவில்லை. ஒரு வருட காலண்டரில் இருக்கும் மாதங்களையும், தேதிகளையும் புரட்டி பார்த்தாலே எனக்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான காலண்டர்கள் மனதில் பதிந்துவிடும்” என்கிறான்.
அவனிடம் 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி என்ன கிழமை என்று கேட்டதற்கு சில நொடியிலேயே வெள்ளிக்கிழமை என்று பதில் சொல்லிவிட்டான். அதோடு அந்த ஆண்டுக்கான 30 நாட்களையும், கிழமைகள் வாரியாக கைப்பட எழுதி கொடுத்து விட்டான். ஒரே தேதி, ஒரே கிழமைகளில் ஜூன் மாதம் எந்தெந்த ஆண்டுகளில் வரும் என்பதையும் வரிசையாக அடுக்கிவிட்டான். இவனது மூளைக்குள் இருக்கும் பதிவு மின்னலாய் வெளிப்படுகிறது. சிலருக்கு புத்தகங்களில் படித்த பக்கங்களை அப்படியே மனத்திரையில் பதிவாகி இருப்பதுபோல இவனுக்கு காலண்டர்கள் கட்டங்களாக பதிவாகி இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்களும் இவனுடைய அசாத்திய ஆற்றலை பரிசோதித்து பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.
“என் மகனை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அழைத்து பரிசோதித்தார்கள். அவர்கள் காலண்டர்களை எளிமைப்படுத்தி நினைவில் வைக்கும் பார்முலா ஒன்றை கையாண்டார்கள். இவனிடம் கேட்ட கேள்விக்கு அதில் விடை தேடுவதற்குள்ளாகவே பதில் சொல்லி விட்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள். திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளுமாறு பாராட்டினார்கள்” என்கிறார், சிவபிரியா.
ஆரம்பத்திலேயே மகனிடம் இருந்த திறமையை சரிவர கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டோமே என்ற மன வருத்தம் வேலுச்சாமி-சிவபிரியா தம்பதிக்கு இருக்கிறது.
“மற்றவர்கள் பாராட்டும்போதுதான் மகனுக்குள் இவ்வளவு ஆற்றல் இருக்கிறதா? என்பதே எங்களுக்கு தெரியவந்தது. சிறுவயதிலேயே குழந்தைகளிடம் தனித்திறன்கள் வெளிப்படத்தொடங்கிவிடும். அதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. நாங்கள் காலதாமதமாகத்தான் அதனை புரிந்து கொண்டோம். பெற்றோர்கள் ஒருபோதும் தங்கள் விருப்பங்களை பிள்ளைகளிடம் திணித்து நிர்பந்திக்கக்கூடாது. ஏதாவது ஒரு விஷயத்தை அவர்கள் ஆர்வமாக செய்யும் போது, ‘அது பயனுள்ளதாக இருக்காது’ என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர்களுடைய சிந்தனை அதில் வேறுமாதிரி பதிந்திருக்கும். உங்களுக்கு விருப்பமில்லை என்பதற்காக, அவர்களுடைய ஆர்வத்திற்கு கடிவாளம் போட்டு விடக்கூடாது. அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும். அவர் களின் போக்கிற்கே சென்று, தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
நாங்கள் காலதாமதமாக அவனுடைய தனித் திறனை கண்டறிந்தாலும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். மற்றவர்களின் பாராட்டுடன் சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. அதற்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உறு துணையாக இருந்தார். தொடர்ந்து அவனுடைய வளர்ச்சியில் அக்கரை எடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான போட்டியிலும் என் மகனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இருக்கும் தனித்திறன்களை இன்னும் மெருகேற்ற வேண்டும். அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்கிறார்கள்.

Related Tags :
Next Story