குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக் கொள்ளலாம்


குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக் கொள்ளலாம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:29 PM IST (Updated: 11 Jun 2017 3:29 PM IST)
t-max-icont-min-icon

மற்றவர்களை சாதாரணமாக நினைத்து எடை போட்டுவிடக் கூடாது. உங்களிடம் இல்லாத ஏதாவது ஒரு சிறப்பு பண்பு, குணநலன், தனித்திறன்கள் நிச்சயம் அவர்களிடம் இருக்கும்.

ற்றவர்களை சாதாரணமாக நினைத்து எடை போட்டுவிடக் கூடாது. உங்களிடம் இல்லாத ஏதாவது ஒரு சிறப்பு பண்பு, குணநலன், தனித்திறன்கள் நிச்சயம் அவர்களிடம் இருக்கும். பிறரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள், பழக்க வழக்கங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆதலால் யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.

ஒருவரிடம் பழகும்போதே அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்கள் என்னென்ன என்பதை பட்டியல் போட வேண்டும். அப்படி செய்தாலே அவர்களுடைய செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடுவீர்கள். அவைகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை வகைப்படுத்துவது எளிதாகிவிடும். அத்தகைய சிறந்த விஷயங்கள் மனதிலும் சட்டென்று பதிந்துவிடும். அவற்றை பின்பற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், சவுகரியங்களை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுவதும் எளி தாகிவிடும்.

எந்தவொரு விஷயத்தையுமே கூர்ந்து கவனிக்கும்போதுதான் அதிலிருக்கும் சாதக, பாதகங்கள் பற்றிய சிந்தனை எழும். நிறைய பேர், அவர்களுடன் நெருக்கமாகப் பழகுகிறவர்களிடம் இருக்கும் குணநலன்கள், பண்புகள், நல்ல பழக்க வழக்கங்களை கூட கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

பிறரிடம் இருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் சிலருக்கு தயக்கம் ஏற்படும். தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து கீழ் இறங்கி வருவதாக நினைத்து சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்க யோசிப்பார்கள். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நிலைப்பாடே அவர்களுடைய பிரதான பிரச்சினையாக இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து கூட கற்றுக்கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பொதிந்திருக்கும். நல்ல விஷயங்களை யார் கடைப்பிடித்தாலும் அதனை பின்பற்றுவதற்கு யோசிக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ததை அப்படியே ஜெராக்ஸ் நகலாக பின்தொடர்வதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. நல்ல விஷயங்கள் நிச்சயம் நல்வழிப்படுத்தும். மற்றவர்களின் பாராட்டையும் பெற்றுத்தரும். 

Next Story