பாட்டிக்கு போட்டி..!


பாட்டிக்கு போட்டி..!
x
தினத்தந்தி 11 Jun 2017 3:41 PM IST (Updated: 11 Jun 2017 3:41 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் வசிக்கும் மெக்கென்ஸி-டிரெக் டில்லாட்சன் தம்பதியர் தங்களுடைய 3 குழந்தைகளுடன் உலகத்தை சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்தனர்.

மெரிக்காவில் வசிக்கும் மெக்கென்ஸி-டிரெக் டில்லாட்சன் தம்பதியர் தங்களுடைய 3 குழந்தைகளுடன் உலகத்தை சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்தனர். ‘இந்தப் பயணத்தின்போது குழந்தைகளை கவனித்து கொள்வதற்கும், சமையல் செய்வதற்கும் வயதான பாட்டி ஒருவரின் உதவி தேவைப்படுகிறது’ என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். 10, 20 விண்ணப்பங்கள் வரும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அதற்கு அவர்களின் அணுகுமுறைதான் காரணம்.

“நாங்கள் மறக்க முடியாத ஒரு உலகப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டோம். மூன்று குழந்தைகளையும் எங்கள் இருவரால் கவனித்துக் கொள்வது கஷ்டம். அதனால் குழந்தைகள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட பாட்டி ஒருவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அவருக்கான செலவுகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்வோம். அத்துடன் அவருக்கென்று ஒவ்வொரு நாளும் தனியாக சில மணி நேரங்களை ஒதுக்கி விடுவோம். எங்களுடனே அவர் தங்கிக் கொள்ளலாம், சாப்பிடலாம். மிக நாகரிகமாகவும், மனிதத் தன்மையோடும் அவரை நடத்துவோம்.

இவை தவிர, அவருக்கு மாதம் ஒரு தொகையைச் சம்பளமாகவும் வழங்கி விடுவோம். இந்தப் பயணத்துக்காக எங்களின் வீட்டை விற்றிருக்கிறோம். சில விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்களைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை. திகைத்து போய்விட்டோம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், செவிலியர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள் கூட விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் டிரெக் டில்லாட்சன்.

தேர்வாகப் போகும் அதிர்ஷ்டசாலி பாட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது! 

Next Story