நாகர்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையல் தொழிலாளி கைது
நாகர்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார். சிறுமியின் கருவை கலைத்த டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியைச் சேர்ந்தவர் சாமிதாஸ் என்ற நத்தை (வயது 63). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சமையல் வேலைக்கு 16 வயது சிறுமியை, சாமிதாஸ் காய்கறி நறுக்க, பாத்திரங்கள் கழுவும் வேலைக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமியை, சாமிதாஸ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகி றது. இதேபோல் சாமிதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20–ந் தேதியும் அந்த கல்லூரியின் சமையல் பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கருக்கலைப்பு
இதைத்தொடர்ந்து, அந்த சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவள் தனது பெற்றோரிடம் எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையே அந்த சிறுமியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருக்கச் செய்தனர். இந்தநிலையில் சிறுமியின் வயிறு பெரிதானதைத் தொடர்ந்து அவளது பெற்றோர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது வெளியே தெரிய வந்தால் அவமானமாகிவிடும் என்று கருதிய சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் கரு அகற்றப்பட்டது.
கைது
இதற்கிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாகி, வயிற்றில் இருந்த கரு கலைக்கப்பட்ட சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெராட்டின் வினோ மற்றும் போலீசாரும், குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிதாசை கைது செய்தனர். சிறுமி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியின் வயிற்றில் இருந்த கருவை கலைத்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related Tags :
Next Story