தூத்துக்குடி– நாசரேத் திருமண்டல புதிய பேராயருக்கான அபிஷேக விழா 10 பேராயர்கள் பங்கேற்பு
நாசரேத்தில் நடந்த தூத்துக்குடி– நாசரேத் திருமண்டல புதிய பேராயருக்கான அபிஷேக விழாவில் 10 பேராயர்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத்,
நாசரேத்தில் நடந்த தூத்துக்குடி– நாசரேத் திருமண்டல புதிய பேராயருக்கான அபிஷேக விழாவில் 10 பேராயர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பேராயர்சி.எஸ்.ஐ. தூத்துக்குடி– நாசரேத் திருமண்டலத்தில் புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்ட நாசரேத் கதீட்ரல் தலைமை குரு தேவசகாயத்திற்கான அபிஷேக ஆராதனை விழா, நேற்று மாலை நாசரேத் கதீட்ரலில் நடந்தது.
இந்த சிறப்பு ஆராதனையை சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் (மாடரேட்டர்) தாமஸ் கே.ஓமன் தலைமை தாங்கி நடத்தினார். இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேராயர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேராயர் தேவசகாயத்தின் தலையில் கை வைத்து அபிஷேகம் செய்தனர். இந்த சிறப்பு ஆராதனையில் பேராயர் தேவசகாயத்திற்கு செங்கோல், பைபிள், திரு சிலுவை, சிறப்பு அங்கி ஆகியவை வழங்கப்பட்டு, அவைகள் அணிவிக்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்பின்னர் பேராயர் ஆசனத்தில் புதிய பேராயரை அமர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் துணை பிரதம பேராயர் பிரசாத் ராவ், சினாடு கழக பொதுச்செயலாளர் சதானந்தா, பொருளாளர் ராபர்ட் புரூஸ், சி.எஸ்.ஐ தூத்துக்குடி– நாசரேத் திருமண்டலத்தின் லே செயலாளர் எஸ்.டி.கே. ராஜன், திருமண்டல துணை தலைவர் லூர்து ராஜ் ஜெயசிங், திருமண்டல குருத்துவ காரியதரிசி தேவராஜ் ஞானசிங், திருமண்டல பொருளாளர் மோகன், திருமண்டல அலுவலக மேலாளர் குமாரதாஸ், திருமண்டலத்தின் நடுநிலைப்பள்ளிகள் மேலாளர் ஜெசுதாசன், தூத்துக்குடி– நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட சேகர தலைவர்கள், குருவானவர்கள், சபை ஊழியர்கள், தூத்துக்குடி– நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், பாஸ்ட்டரேட் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நாசரேத் கதிட்ரல் வளாகத்தில் நடந்த விழாவில், தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் ஜெசுசகாயம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேராயர்கள், திருமண்டல நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சி.த.செல்லப்பாண்டியன், சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.