ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
ஒரகடம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலி தொழிலாளி. இவருடைய மகன் வெற்றிப்பிரியன்(வயது 12). இவன், அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி விடுமுறை என்பதால் நேற்று வெற்றிப்பிரியன் வீட்டில் இருந்தான். பின்னர் மற்றொரு சிறுவனுடன் அங்குள்ள ஏரிக்கு சென்றான். ஏரியில் இறங்கி காலை கழுவ முயன்ற வெற்றிப்பிரியன், எதிர்பாராதவிதமாக ஏரியில் மண் எடுத்த ஆழமான பகுதியில் இறங்கி விட்டான்.
நீரில் மூழ்கி பலி
இதனால் அவன் நீரில் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த சிறுவன், ஊருக்குள் ஓடிச்சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தான். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, ஏரியில் மூழ்கிய மாணவன் வெற்றிப் பிரியனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர் கள், மாணவன் வெற்றிப்பிரியன் ஏற்கனவே நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், பலியான மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story