தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Jun 2017 1:30 AM IST (Updated: 12 Jun 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி அடுத்த மாதம்(ஜூலை) தொடங்குகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி அடுத்த மாதம்(ஜூலை) தொடங்குகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கலெக்டர் வெங்கடேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி அடுத்த மாதம்(ஜூலை) 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி, 1–1–17–ந் தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்களின் பெயர்களை நீக்கவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை தபால் மூலமாகவும், தாலுகா அலுவலகங்களில் நேரிலோ விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமும், இ–சேவை மையங்களில் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

மேலும் 9.7.2017 மற்றும் 23.7.2017 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அப்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மனுக்களை கொடுக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story